FIR பதிவு செய்வது கட்டாயம்: லலிதா குமாரி Vs உத்தரப் பிரதேசம் முக்கிய தீர்ப்பு!

வழக்கின் விவரங்கள் (Case Details)வழக்கின் பெயர்: லலிதா குமாரி விஷ்வஸ் உத்தரப் பிரதேச அரசு மற்றும் பலர் (Lalita Kumari vs. Govt. of U.P. & Ors.)
வழக்கு எண்: Writ Petition (Criminal) No. 68 of 2008

தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்: இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court of India – 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு)

தீர்ப்பு தேதி: நவம்பர் 12, 2013

வழக்கின் பின்னணி (Facts of the Case)

லலிதா குமாரி என்ற சிறுமி கடத்தப்பட்டார். இதுகுறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் உடனடியாக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யவில்லை. நீண்ட தாமதத்திற்குப் பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறை புகாரைப் பெற்றவுடன் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி இந்த வழக்கின் மூலம் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது.

நீதிமன்றத்தின் முக்கிய கேள்வி (Point of Law)”குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 154-ன் கீழ், ஒரு புகாரில் புலனாவதான குற்றம் (Cognizable Offense) நடந்திருப்பது தெரிந்தால், போலீசார் உடனடியாக FIR பதிவு செய்வது கட்டாயமா? அல்லது அதற்கு முன் முதற்கட்ட விசாரணை நடத்த அவர்களுக்கு அதிகாரம் உள்ளதா?”

வழக்கின் பின்னணி (Facts of the Case)

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு பின்வரும் மிக முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கியது:FIR பதிவு செய்வது கட்டாயம்: காவல் துறையினரிடம் பெறப்படும் புகாரில் ஒரு ‘புலனாவதான குற்றம்’ (Cognizable Offense) நடந்துள்ளது என்பது முதன்மையாகத் தெரிந்தால், பிரிவு 154-ன் கீழ் FIR பதிவு செய்வது கட்டாயமாகும். இதில் போலீசாருக்கு எந்த மாற்று அதிகாரமும் இல்லை.முதற்கட்ட விசாரணை (Preliminary Inquiry): கொடுக்கப்பட்ட புகாரில் குற்றம் நடந்ததற்கான அறிகுறி தெளிவாகத் தெரியவில்லை என்றால் மட்டுமே, அது உண்மையா இல்லையா என்பதைக் கண்டறிய 7 நாட்களுக்குள் ஒரு முதற்கட்ட விசாரணை நடத்தலாம்.

எந்தெந்த வழக்குகளில் முதற்கட்ட விசாரணை நடத்தலாம்?:

குடும்பத் தகராறுகள் (Matrimonial disputes)

வணிகக் குற்றங்கள் (Commercial offenses)

மருத்துவ அலட்சியம் சார்ந்த வழக்குகள் (Medical negligence cases)

ஊழல் தடுப்பு வழக்குகள் (Corruption cases)